கும்பகோணம் தொடருந்து நிலையம்
கும்பகோணம் | ||
---|---|---|
தொடருந்து நிலையம் | ||
கும்பகோணம் தொடருந்து நிலையத்தின் பிரதான நுழைவாயில் | ||
பொது தகவல்கள் | ||
அமைவிடம் | காமராஜர் நகர், கும்பகோணம், தஞ்சாவூர், தமிழ்நாடு இந்தியா | |
ஆள்கூறுகள் | 10°57′16″N 79°23′22″E / 10.9544°N 79.3894°E | |
ஏற்றம் | 27 மீட்டர்கள் (89 அடி) | |
உரிமம் | இந்திய இரயில்வே | |
இயக்குபவர் | தென்னக இரயில்வே | |
தடங்கள் | சென்னை எழும்பூர் – கும்பகோணம் முக்கிய வழித்தடம் கும்பகோணம் - தஞ்சாவூர் முக்கிய வழித்தடம் | |
நடைமேடை | 3 | |
இருப்புப் பாதைகள் | 4 | |
இணைப்புக்கள் | ஆட்டோ ரிக்சா நிறுத்தம், வாடகையுந்து நிறுத்தம், பேருந்து நிலையம் | |
கட்டமைப்பு | ||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | |
தரிப்பிடம் | உண்டு | |
மாற்றுத்திறனாளி அணுகல் | ||
மற்ற தகவல்கள் | ||
நிலை | இயங்குகிறது | |
நிலையக் குறியீடு | KMU | |
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | |
கோட்டம்(கள்) | திருச்சிராப்பள்ளி | |
வரலாறு | ||
திறக்கப்பட்டது | பெப்ரவரி 15, 1877 | |
மின்சாரமயம் | மாற்றம் செய்யப்படுகிறது | |
பயணிகள் | ||
பயணிகள் | 5000/ஒரு நாளைக்கு | |
சேவைகள் | ||
30 விரைவுத் தொடருந்துகள் மற்றும் 10 பயணிகள் தொடருந்துகள்
|
கும்பகோணம் தொடருந்து நிலையம் (Kumbakonam Railway Station, நிலையக் குறியீடு:KMU) இந்தியாவின், தமிழ்நாட்டிலுள்ள, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது சென்னை எழும்பூர் – தஞ்சாவூர் முக்கிய வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது தென்னக இரயில்வேயின், திருச்சிராப்பள்ளி கோட்டத்தின் கீழ் இயங்குகிறது.[1]
வரலாறு
[தொகு]கும்பகோணம் தொடருந்து நிலையம் ஆனது, 1877 பிப்ரவரி 15 ஆம் தேதி பயணிகள் சேவைக்கு திறக்கப்பட்டது, அப்போது தென்னிந்திய இரயில்வே தஞ்சாவூர் மற்றும் மாயவரம் (தப்போது மயிலாடுதுறை) இடையே 70.42 கி.மீ தூரத்திற்கு தொடருந்து போக்குவரத்தைத் தொடங்கியது.
அமைவிடம்
[தொகு]இந்நிலையம் கும்பகோணத்தில், காமராஜர் நகரில் அமைந்துள்ளது. இந்நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் 900மீ தொலைவிலும், நகரப் பேருந்து நிலையம் 1000மீ தொலைவிலும் உள்ளது. நகரப் பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையத்துடன், நேரடியாக இணைக்கப்பட்ட நகரப் பேருந்துகள் மற்றும் சிற்றுந்து சேவைகள் உள்ளன. இதன் அருகிலுள்ள வானூர்தி நிலையம், 81 கிலோமீட்டர் (50 மைல்) தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.
வழித்தடங்கள்
[தொகு]- சென்னை எழும்பூரை நோக்கி ஒற்றை அகல இருப்புப் பாதை. (வழி: கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் தாம்பரம்)
- தஞ்சாவூரை நோக்கி ஒற்றை அகல இருப்புப் பாதை. (வழி: பாபநாசம்)
- விருத்தாச்சலம் நோக்கி ஒற்றை அகல இருப்புப் பாதை. (வழி: ஜெயங்கொண்டம்) [கணக்கெடுப்பு முடிந்தது]
- நீடாமங்கலம் நோக்கி ஒற்றை அகல இருப்புப் பாதை. (வழி: ஆலங்குடி) [கணக்கெடுப்பு முடிந்தது]
அருகிலுள்ள நிலையங்கள்
[தொகு]- தாராசுரம் (DSM)
- சுந்தரபெருமாள் கோவில் (SPL)
- சுவாமிமலை (SWI)
- பாபநாசம் (PML)
- திருநாகேசுவரம் (TRM)
- திருவிடைமருதூர் (TDR)
- ஆடுதுறை (ATD)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Free WiFi facility at Kumbakonam railway station". தி இந்து (செப்டம்பர் 18, 2017)
வெளி இணைப்புகள்
[தொகு]- கும்பகோணம் தொடருந்து நிலையம் indiarailinfo.