Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook

அரசமரபு என்பது ஒரே குடும்பத்திலிருந்து வரும் தொடர்ச்சியான ஆட்சியாளர்களைக் குறிப்பதாகும்.[1] நிலமானிய முறைமை அல்லது முடியாட்சி அமைப்புகளில் பொதுவாக இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சில நேரங்களில் குடியரசுகளிலும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. இதைக் குறிக்கும் மாற்றுச் சொற்கள் "வம்சம்", "குடும்பம்" மற்றும் "இனம்" ஆகியவையாகும். உலத்தில் நீண்ட காலத்திற்கு நீடித்திருக்கும் அரசமரபானது சப்பானின் ஏகாதிபத்தியக் குடும்பமாகும். இது ஏமாட்டோ அரசமரபு என்றும் அறியப்படுகிறது. பாரம்பரியமாக இவர்கள் கி. மு. 660 இல் இருந்து ஆட்சி செய்து வருவதாகக் கருதப்படுகிறது.

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசமரபு&oldid=3167478" இலிருந்து மீள்விக்கப்பட்டது