64 – உரோமை நகரில் பரவிய பெரும் தீ, ஆறு நாட்களில் நகரின் பெரும் பகுதியை அழித்தது.
1845 – அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் பரவிய தீயினால் 30 பேர் உயிரிழந்தனர், 345 கட்டடங்கள் அழிந்தன.
1947 – பர்மாவின் நிழல் அரசின் பிரதமரும் தேசியவாதியுமான ஆங் சான் (படம்), மற்றும் ஆறு அமைச்சர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.
தாலின்எஸ்தோனியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமுமாகவுள்ளது. இது 2011ஆம் ஆண்டிற்கான ஐரோப்பியக் கலாச்சாரத் தலைநகரங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து 1920 கள் வரையான காலப்பகுதியில் இந்நகரம் ரேவல் என அறியப்பட்டது.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,66,585 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.