Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
Transfiguration pending
உள்ளடக்கத்துக்குச் செல்

செவிலியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேலம் அரசு செவிலியர் பயிற்சியகம்

செவிலியர் என்பவர் நோயாளியின் நோயைக் கண்டறிந்து அதற்குத் தகுந்தபடி தான் பயின்ற செவிலியப் படிப்பின் வாயிலாகவும், மருத்துவரின் பரிந்துரையின்படியும் மற்றும் அறிவியல் முறைப்படியும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பவர்களாவர்.

மருத்துவர்களுக்கு அவர்களின் சிகிச்சைப் பணிகளில் உதவி செய்பவர்களாகவும், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் பாதுகாவலராகவும் செவிலியர்கள் (Nurse) இருக்கின்றனர். சேவை மனப்பான்மையுடன் செயல்படும் இத்தொழிலில் அதிகமாக பெண்களே ஈடுபட்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சில நேரங்களில் மருத்துவர்களை விட செவிலியர்களின் பணி மிக முக்கியமானது. அவர்கள் மருத்துவமனைகளிலும், மருத்துவர் அலுவலகங்களிலும், சமுதாய நலக் கூடங்களிலும் பணிபுரிகிறார்கள். நோயாளிகள் வெளியே வர முடியாவிட்டால் வீட்டிற்கே சென்று வேலை பார்க்கிறார்கள். இவர்களின் கனிவான பேச்சு மற்றும் துரிதமான மருத்துவ சிகிச்சை மூலம் மருத்துவர்களை விட நோயாளிகளுக்கு நெருக்கமாகிறார்கள். அறுவை சிகிச்சையின் போது அவர்களின் பணி இன்றியமையாதது. குழந்தை பிறப்பின்போது அவர்களின் கவனிப்பு, தாயைப் போன்று அன்பு காட்டுபவர்கள். குழந்தை பிறந்த பின்பு அவர்களுக்கு எப்படி தாய்ப்பால் கொடுப்பது,குளிப்பாட்டுவது மற்றும் தாய் சேய் நலத்தில் மிகவும் அக்கறை காட்டுவார்கள். கொள்ளை நோய்கள் வரும்போது வீட்டிற்கே செல்லமுடியாமல் மிகத் துரிதமாக செயல்பட்டு மருத்துவரின் அறிவுரைப்படி உதவி செய்வார்கள்

காட்சியகம்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செவிலியர்&oldid=3456315" இலிருந்து மீள்விக்கப்பட்டது