Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

கனவுகளைப் பதியும் கருவி சாத்தியமானதே, ஆய்வாளர் அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், அக்டோபர் 28, 2010


கனவுகளை இலத்திரனியல் முறைப்படி பதிந்து அவற்றை விளக்கவும் வைக்கும் கருவி ஒன்றை தாம் அமைத்து வருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


மனித மூளை

மூளையின் உயர் செயற்பாடுகளை பதியும் திட்டம் ஒன்றைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக நேச்சர் என்ற அறிவியல் இதழில் மொரான் செர்ஃப் என்பவர் தெரிவித்துள்ளார். "இதனைக் கொண்டு மக்களின் கனவுகளைப் படிக்க முயலுவோம்," என அவர் கூறினார்.


”இதன் மூலம் நாம் எவரினதும் தனிப்பட்ட உரிமைகளைப் பறிக்க விரும்பவில்லை, ஆனால் மக்கள் எப்படி ஏன் கனவு காண்கிறார்கள் என்பதை அறிவதே எமது நோக்கம்”.


பண்டைய எகிப்தியர்கள் கனவுகளை கடவுளின் செய்தி என நினைத்தனர். "மக்கள் ஏன் கனவு காண்கிறார்கள் என்பதற்கு இதுவரை தெளிவான மறுமொழி தரப்படவில்லை" என மொரான் சேர்ஃப் தெரிவித்தார்.


மூலம்

[தொகு]