இசுகந்தர் மலேசியா
மாநிலம் | ஜொகூர் |
---|---|
மாவட்டங்கள் | ஜொகூர் பாரு மாவட்டம் கூலாய் மாவட்டம் பொந்தியான் மாவட்டம் கோத்தா திங்கி மாவட்டம் |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 20,85,546 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 79xxx-82xxx, 86xxx |
மலேசியத் தொலைபேசி எண் | +607 (07-2, 07-3, 07-5, 07-6, 07-7 and 07-8) |
இணையதளம் | iskandarmalaysia.com.my |
இசுகந்தர் மலேசியா அல்லது இசுகந்தர் வளர்ச்சி மண்டலம் (மலாய்: Wilayah Pembangunan Iskandar; ஆங்கிலம்: Iskandar Malaysia அல்லது Iskandar Development Region (IDR); சீனம்: 馬來西亞依斯干達; ஜாவி: إسکندر مليسيا) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில் அமைந்துள்ள வளர்ச்சி மண்டலம் ஆகும். தெற்கு ஜொகூர் பொருளாதார வளர்ச்சி மண்டலம் (South Johor Economic Region) (சுருக்கம்: SJER) என்றும் அழைக்கப் படுகிறது.[1]
2006 நவம்பர் 6-ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இது மலேசியாவின் முதல் பொருளாதார வளர்ச்சி மண்டலம் ஆகும். பல பில்லியன் ரிங்கிட் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. உள்ளூர் மற்றும் தேசிய பொருளாதாரத்திற்குக் கணிசமான அளவிற்கு வளர்ச்சியை வழங்கும் வகையில் இந்தப் பொருளாதார மேம்பாட்டு மண்டலம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
பொது
[தொகு]இசுகந்தர் மலேசியா சுமார் 2,217 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் ஜொகூர் பாரு, தெற்கு பொந்தியான், கூலாய், பாசீர் கூடாங் மற்றும் ஜொகூர் நிர்வாக மையம் அமைந்துள்ள இசுகந்தர் புத்திரி ஆகியவை அடங்கும்.[2][3]
நகராண்மைக் கழகம்
[தொகு]இசுகந்தர் மலேசியா அமைப்பிற்குள் அடங்கும் நகராண்மைக் கழகங்கள்:
- பெங்கேராங் நகராண்மைக் கழகம் (Majlis Perbandaran Pengerang);
- பொந்தியான் நகராண்மைக் கழகம் (Majlis Perbandaran Pontian)
- இசுகந்தர் புத்திரி மாநகராட்சி (Majlis Bandaraya Johor Bahru)
- கூலாய் நகராண்மைக் கழகம்l (Majlis Perbandaran Kulai)
- ஜொகூர் பாரு மாநகராட்சி (Majlis Bandaraya Johor Bahru)
- பாசீர் கூடாங் மாநகராட்சி (Majlis Bandaraya Pasir Gudang)
உட்பட மேலும் ஐந்து உள்ளூராட்சிகளின் அதிகார வரம்பில் பரவல் பகுதி உள்ளது.
2019-ஆம் ஆண்டில், மலேசியாவின் அப்போதைய பிரதமர் மகாதீர் முகமது, இஸ்கந்தர் மலேசியாவை குளுவாங் மாவட்டம் மற்றும் கோத்தா திங்கி மாவட்டம் ஆகிய மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப் போவதாக அறிவித்தார்.[4]
உள்ளூராட்சிகள்
[தொகு]- கோத்தா திங்கி மாவட்ட நகராண்மைக் கழகம் (Majlis Daerah Kota Tinggi);
- குளுவாங் மாவட்ட நகராண்மைக் கழகம் (Majlis Daerah Kluang);
- சிம்பாங் ரெங்கம் மாவட்ட நகராண்மைக் கழகம் (Majlis Daerah Simpang Renggam);
ஆகிய மாவட்ட உள்ளூராட்சிகள் இணைத்துக் கொள்ளப்பட்டன. அதன் பின்னர் இசுகந்தர் மலேசியாவின் மொத்தப் பரப்பளவும் 4,749 சதுர கிலோமீட்டராக அதிகரித்தது.
இசுகந்தர் மலேசிய வளாக மேம்பாட்டு ஆணையம்
[தொகு]2025-ஆம் ஆண்டில் இந்த மண்டலத்தின் மக்கள் தொகை 3 மில்லியன் என எதிர்பார்க்கப் படுகிறது. அதே வேளையில் முதலீடுகள் ஏறக்குறைய ரிங்கிட் 383 பில்லியன்களை அடையலாம் என்றும் கணிக்கப்படுகிறது.[1]
இசுகந்தர் மலேசியாவின் மேம்பாட்டுத் திட்டங்கள் அனைத்தும், இசுகந்தர் வளாக மேம்பாட்டு ஆணையத்தால் 9Iskandar Regional Development Authority) திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தப் படுகின்றன.
இசுகந்தர் மலேசியாவில் ஊக்குவிக்கப்படும் துறைகள்
[தொகு]- மின்னியல் & மின்னணுவியல் - (Electrical & Electronics)
- பெட்ரோலிய வேதியல் - (Petrochemical)
- எண்ணெய் வேதியியல் - (Oleo-chemical)
- உணவு வேளாண் தொழில்கள் - (Food & Agro-Processing)
- இருப்பியக்கச் சேவைகள் - (Logistics)
- சுற்றுலாத்துறை - (Tourism)
- புத்தாக்கத் திறன் - (Creative)
- நல்வாழ்வியல் - (Healthcare)
- நிதிசார் துறைகள் - (Financial)
மேலும் காண்க
[தொகு]- இசுகந்தர் புத்திரி
- மேதினி இசுகந்தர்
- சுல்தான் இசுகந்தர் கட்டிடம்
- முத்தியாரா ரினி
- இசுகந்தர் புத்திரி மாநகராட்சி
- மலேசியா-சிங்கப்பூர் இரண்டாவது பாலம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Iskandar Malaysia is an ambitious economic initiative which aims to develop a substantial and valuable growth corridor in Malaysia's Johor region, stretches over a designated region of 4,749 sq km – almost six-times the entire area of nearby neighbour Singapore". பார்க்கப்பட்ட நாள் 31 August 2022.
- ↑ Iskandar Regional Development Authority & Iskandar Malaysia Information Pack, 23 February 2007, Khazanah Nasional, pg 3, retrieved 3 March 2009
- ↑ "Iskandar Malaysia growth corridor doubles in size". பார்க்கப்பட்ட நாள் 22 February 2019.
- ↑ Rancangan Malaysia Kesembilan, Ministry of Information Malaysia, retrieved 4 March 2009
வெளி இணைப்புகள்
[தொகு]- அலோர் ஸ்டார் மாநகராட்சி - கெடா - (Alor Setar City Council)
- ஈப்போ மாநகராட்சி - பேராக் - (Ipoh City Council)
- இசுகந்தர் புத்திரி மாநகராட்சி - ஜொகூர் - (Iskandar Puteri City Council)
- ஜொகூர் பாரு மாநகராட்சி - ஜொகூர் - (Johor Bahru City Council)
- கோத்தா கினபாலு மாநகராட்சி - சபா - (Kota Kinabalu City Hall)
- கோலாலம்பூர் மாநகராட்சி - கோலாலம்பூர் - (Kuala Lumpur City Hall)
- கோலா திராங்கானு மாநகராட்சி - திராங்கானு - (Kuala Terengganu City Council)
- கூச்சிங் வடக்கு மாநகராட்சி - சரவாக் - (Kuching North City Hall)
- கூச்சிங் தெற்கு மாநகராட்சி - சரவாக் - (Kuching South City Council)
- குவாந்தான் மாநகராட்சி - பகாங் - (Kuantan City Council)
- மலாக்கா மாநகராட்சி - மலாக்கா - (Malacca City Council)
- மிரி மாநகராட்சி - சரவாக் - (Miri City Council)
- பாசீர் கூடாங் மாநகராட்சி - ஜொகூர் - (Pasir Gudang City Council)
- பினாங்கு தீவு மாநகராட்சி - பினாங்கு - (Penang Island City Council)
- பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி - சிலாங்கூர் - (Petaling Jaya City Council)
- செபராங் பிறை மாநகராட்சி - பினாங்கு - (Seberang Perai City Council)
- சிரம்பான் மாநகராட்சி - நெகிரி செம்பிலான் - (Seremban City Council)
- சா ஆலாம் மாநகராட்சி - சிலாங்கூர் - (Shah Alam City Council)
- சுபாங் ஜெயா மாநகராட்சி - சிலாங்கூர் - (Subang Jaya City Council)
மாவட்டத்தின்
நகரங்கள்
நகரங்கள்
மாவட்டத்தின்
நகரங்கள்
மாவட்டத்தின்
நகரங்கள்
மாவட்டத்தின்
நகரங்கள்
மாவட்டத்தின்
நகரங்கள்
மாவட்டத்தின்
நகரங்கள்
மாவட்டத்தின்
நகரங்கள்
பகுதியின்
நகரங்கள்
மாவட்டத்தின்
நகரங்கள்
மாவட்டத்தின்
நகரங்கள்
மாவட்டத்தின்
நகரங்கள்
மாவட்டத்தின்
நகரங்கள்
மாவட்டத்தின்
நகரங்கள்
மாவட்டத்தின்
நகரங்கள்
மாவட்டத்தின்
நகரங்கள்
• எண்டாவ் ஆறு • ஜொகூர் ஆறு • கீசாங் ஆறு • மெர்சிங் ஆறு • மூவார் ஆறு • பூலாய் ஆறு • சிகாமட் ஆறு • ஸ்கூடாய் ஆறு
• தெப்ராவ் ஆறு