Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை எழுத்தாளர் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கை எழுத்தாளர் சங்கம் இலங்கையின் தமிழ் சிங்கள மொழிகளைத் தாய்மொழியாகக்கொண்ட எழுத்தாளர்களின் ஒன்றிணைந்த இயக்கமாக நிறுவனமயப்படுத்தப்பட்ட ஓர் எழுத்தாளர் அமைப்பு ஆகும்.

தோற்றம்

[தொகு]

ஈழத்தின் முதல் முற்போக்கு சஞ்சிகையான பாரதியினை நடத்திவந்த கே. கணேஷ், கே. இராமநாதன் ஆகியோர் இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோடு தொடர்புகள் கொண்டிருந்தமையால் அதனைச்சேர்ந்த பிரபல எழுத்தாளர் முல்க்ராஜ் ஆனந்த் இலங்கை வந்திருந்தபோது அதனையொட்டி எழுத்தாளர் நிறுவனமொன்றினை ஆரம்பிக்க முயன்றனர்.

விபுலாநந்த அடிகளாரைத் தலைவராகவும், சிங்கள எழுத்தாளர் மார்ட்டின் விக்கிரமசிங்கவை உப தலைவராகவும் கொண்டு 1947 இல் இலங்கை எழுத்தாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

இறுதிக்காலம்

[தொகு]

1950 க்கு முன்னமே இச்சங்கம் இயக்கமிழந்துபோனது.