Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

கேமரன் டியாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேமரன் டயஸ்
பிறப்புகேமரன் மிசேல் டயஸ்
ஆகத்து 30, 1972 ( 1972 -08-30) (அகவை 51)
சான் டியேகோ, கலிபோர்னியா, அமெரிக்கா
பணிநடிகை, மாடல்
செயற்பாட்டுக்
காலம்
1988–1993 (மாடல்)
1994–அறிமுகம் (நடிகை)

கேமரன் டயஸ் (Cameron Michelle Diaz, பிறப்பு: ஆகத்து 30, 1972) ஒரு பிரபல்யமான அமெரிக்க நாட்டு நடிகை மற்றும் விளம்பரநடிகை ஆவார். இவர் 1990ம் ஆண்டு தி மாஸ்க் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இவர் திரைப்படத் துறைக்கு அறிமுகம் ஆவதற்கு முன் பல விளம்பரத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்பொழுது தி அதர் வுமன், மற்றும் செக்ஸ் டேப் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

கேமரன் டயஸ் சான் டியேகோ, கலிபோர்னியாவில் பிறந்தார். இவரின் தயார் பில்லி ஜோன் மற்றும் தந்தை எமிலியோ லூயிஸ் டயஸ். இவருக்கு ஒரு மூத்த சகோதரி உண்டு, அவரின் பெயர் சிமேனே. டயஸ் கலிபோர்னியாவின் லாங் பீச்சில் நகரில் வளர்ந்தார், லாங் பீச்சில் பாலிடெக்னி உயர்நிலை பள்ளியில் கல்வி பயின்றார்.

ஆரம்ப தொழில்[தொகு]

இவர் தனது 16 வயதில் ஒரு விளம்பர நடிகையாக தனது தொழில் வாழ்க்கையை தொடங்கினார். இவர் தனது 21வது வயதில் தி மாஸ்க் என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இந்தத் திரைப்படத்திற்கு ஒரு முக்கிய பெண் நடிகை தேடி கொண்டிருந்த போது, எலைட் என்பவரால் தயாரிப்பாளரிடம் கேமரன் டயஸ் பரிந்துரை செய்யப்பட்டார். இந்தத் திரைப்படம் 1994ம் ஆண்டு முதல் 10 அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றானது. அதை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களில் நடித்தார்.

2002இல் டியாஸ்

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
1994 தி மாஸ்க் டினா கார்லெயல்
1995 த லாஸ்ட் சப்பர் ஜூட்
1996 சீ இசு தி ஒன் ஹீத்தர் டேவிஸ்
1996 லிங் மின்னேசொடா பிரட்டி கிளேட்டன்
1996 ஹெட் அபோவே வாட்டர் நத்தாலி
1997 டுல்சா டு கீஸ் ட்ரூடி
1997 மை பெஸ்ட் பிரண்ட்ஸ் வெட்டிங் கிம்மி வாலஸ்
1997 ஏ லைஃப் லெஸ் ஆர்டினரி செலினே நவிலலே
1998 பியர் அண்ட் லோதிங்க் இன் லாசு வேகாசு தொலைக்காட்சி நிருபர்
1998 தேர் இசு சம்திங்க் அபோட் மேரி மேரி ஜென்சன்
1998 வெரி பேட் திங்க்ஸ் லாரா கர்ரேட்டி
1999 மேன் உமன் பிலிம் செலிபிரிட்டி குணச்சித்திரவேடம்
1999 பீயிங்க் சான் மால்கோவிச் லோட்டே ஸ்க்வார்ட்ஸ்
1999 எனி கிவேன் சண்டே கிறிஸ்டினா பக்னியாச்சி
2000 திங்க்சு யூ கேன் டெல் சசுட் பை லுக்கிங்க் அட் ஹெர் கரோல் பேபர்
2000 சார்லி'ஸ் ஏஞ்சல்ஸ் நடாலி குக்
2001 தி இன்விசிபிள் சர்கஸ் பைத்
2001 ஷெர்க் இளவரசி பியோனா குரல்
2001 வெண்ணிலா ஸ்கை ஜூலி கியானி
2002 தி இசுவீட்டசட்டு திங்க் கிறிஸ்டினா வால்டர்ஸ்
2002 கேங்க்ஸ் ஆஃப் நியூயார்க் ஜென்னி எவர்டீனே
2003 சார்லி'ஸ் ஏஞ்சல்ஸ்: ஃபுல் திராட்டில் நடாலி குக்
2004 ஷெர்க் 2 இளவரசி பியோனா குரல்
2005 இன் ஹெர் சூஸ் மக்கி பில்லேர்
2006 தி ஹொலிடே அமண்டா வூட்ஸ்
2007 ஷெர்க் த தேர்ட் இளவரசி பியோனா குரல்
2007 ஷெர்க் த ஹால்ஸ் இளவரசி பியோனா குரல்
2008 வாட் ஹேப்பன்சு இன் வேகாஸ் ஜாய் மெக்நாலி
2009 மை சிஸ்டர்'ஸ் கீப்பர் சாரா பிட்ஸ்
2009 த பாக்ஸ் நோர்மா லூயிஸ்
2010 ஷெர்க் ஃபாரெவர் ஆப்டர் இளவரசி பியோனா குரல்
2010 இசுக்கேர்டு செரக்லெசு இளவரசி பியோனா குரல்
2010 நைட் அண்ட் டே சூன் கேவன்சு
2011 த கிரீன் ஹார்னெட்
2011 பாட் டீச்சர் எலிசபெத் ஆல்சே
2012 வாட் டூ எக்சுபெக்ட் வென் யூஆர் எக்சுபெக்டிங்க் ஜூல்ஸ்
2012 கம்பிட் PJ Puznowski
2012 எ லையர்'சு ஆட்டோபயோகிராபி சிக்மண்ட் பிராய்ட்
2013 தி கவுன்செலோர் மல்கினா
2014 தி அதர் வுமன் கார்லி
2014 செக்ஸ் டேப் அன்னி தயாரிப்பில்
2014 அன்னி மிஸ் ஹன்னிகன் தயாரிப்பில்

சின்னத்திரை[தொகு]

ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
1998 சேட்டர்டே நைட் லைவ் சொந்த வேடம்
2002 சேட்டர்டே நைட் லைவ் சொந்த வேடம்
2005 சேட்டர்டே நைட் லைவ் சொந்த வேடம்
2005 டிரிப்பின் சொந்த வேடம் ஆவணப்படம்
2006 சேட்டர்டே நைட் லைவ் சொந்த வேடம் சிறப்புத் தோற்றம்
2008–2009 சேட்டர்டே நைட் லைவ் கிகி டீமோர் 3 அத்தியாயங்கள்
2009 சீசேம் இசுட்ரீட் சொந்த வேடம்
2010 டாப் கியர் சொந்த வேடம்
2011 எக்ஸ் பேக்டர் சொந்த வேடம் விருந்தினர் நீதிபதி
2013 சேட்டர்டே நைட் லைவ் சொந்த வேடம் அத்தியாயம்: ஆடம் லெவின்/கென்ட்ரிக் லாமர்
2014 பேட் டீச்சர் உற்பத்தியாளர்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேமரன்_டியாஸ்&oldid=3211588" இலிருந்து மீள்விக்கப்பட்டது