Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

சிங்கப்பூர் உணவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிங்கப்பூரில் பலதரப்பட்ட உணவுவகைகள் உள்ளன. இவை எல்லாமே இங்குள்ள பல இன மக்களின் கலாச்சர உணவுகள் ஆகும். பல உணவுகள் எப்படி வேறு நாடுகளிலிருந்து இங்கு சமைக்கப்பட்டதோ, அவ்வாறே இன்றும் சமைக்கப்படுகிறது. வேறு சில உணவுகளோ , இரண்டு கலாச்சாரங்களின் உணவுகளின் கலவையாக அமைகின்றன. சீனர்கள்,மலாய்க்காரர்கள், இந்தியர்கள் என பலத்தரப்பட்ட மக்கள்  சிங்கப்பூரில் வாழ்கின்றனர். 

சிங்கப்பூரில் உணவு என்பது மக்களின் அடையாளமாகவும் திகழ்கிறது. மலாய்க்காரர்கள் பன்றிக்கறியையும் மதுவையும் அருந்தக்கூடாது. இந்தியர்கள் மாட்டுக்கறியை சாப்பிடக்கூடாது. சீனர்கள் ஒரு வகையில் குச்சிகளை பயன்படுத்தி சாப்பிடுவார்கள். மலாய்க்காரர்களும் இந்தியர்களும் கைகளால் உணவை எடுத்து சாப்பிடுவார்கள்.

சாப்பாட்டுக்கடைகளைவிட உணவன்கடிகளில் உண்பதை சிங்கப்பூரர்கள் விரும்புகிறார்கள். கோழிசிசோறு,சாத்தே, பிரியாணி போன்ற உணவுகள் விற்கப்படுகின்றன. பாலாடைக்கட்டி பரோட்டா போன்ற கலவை உணவும் இங்கு விற்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கப்பூர்_உணவு&oldid=3630645" இலிருந்து மீள்விக்கப்பட்டது