Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

சிறீ ரங்கா ஜெயரத்தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீ ரங்கா ஜெயரத்தினம்
Sri Ranga Jeyaratnam
இலங்கை நாடாளுமன்றம்
for நுவரெலியா மாவட்டம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 சனவரி 1971 (1971-01-22) (அகவை 53)
தேசியம்இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சிபிரஜைகள் முன்னணி
முன்னாள் கல்லூரிகொழும்புப் பல்கலைக்கழகம்
வேலைஊடகவியலாளர்

சிறீ ரங்கா ஜெயரத்தினம் (Sri Ranga Jeyaratnam, பிறப்பு: 22 சனவரி 1971) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் ஊடகவியலாளரும் ஆவார். பிரஜைகள் முன்னணி என்ற அமைப்பின் தலைவராக உள்ளார்.[1]

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

சிறீ ரங்கா 1971 சனவரி 22 இல் வவுனியாவில் பிறந்தார்.[2] வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார்.[3] பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்றார். பல்கலைக்கழகக் காற்பந்து அணியின் தலைவராக இருந்து செயற்பட்டார்.[4][5]

பணி

[தொகு]

பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பின்னர் மகாராஜா நிறுவனத்தில் இணைந்து சக்தி ஏஃப். எம். வானொலியில் எரிமலை என்ற நிகழ்ச்சியை வழங்கி வந்தார்.[3] பின்னர் அவர் சக்தி தொலைக்காட்சியில் மின்னல் என்ற நிகழ்ச்சியை நடத்தினார்.[1][3] இந்நிகழ்ச்சி மலையகத் தமிழ் மக்களிடையே பெரிதும் வரவேற்பைப் பெற்றது.[1]

அரசியலில்

[தொகு]

சிறீ ரங்கா முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் குடும்பத்தினருடன், குறிப்பாக அவரது மகன் நாமல் ராசபக்சவுடன், மிக நெருக்கமாக இருந்து வந்தார்.'[6][7] 2005, 2006 காலப்பகுதியில், சிறீ ரங்காவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இனந்தெரியாத நபர்களிடமிருந்து பல முறை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.[8][9] 2006 நவம்பரில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பான ஒரு நிகழ்ச்சியைப் படைத்த பின்னர், சிறீ ரங்காவின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக காவல் துறையினர் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.[10][11] 2010 பெப்ரவரி 3 இல் இவர் பயணம் செய்த வாகனம் ஒன்று அட்டனில் வைத்துத் தாக்கப்பட்டது.[12]

சிறீ ரங்கா 2010 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பாக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[13][14]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 ஜெயராஜ், டி. பி. எஸ். (23 ஏப்ரல் 2010). "Decline of Tamil representation outside the North and East". dbsjeyaraj.com. Archived from the original on 2015-07-13. பார்க்கப்பட்ட நாள் 2015-07-18. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "Directory of Members: Sri Ranga, J." இலங்கை நாடாளுமன்றம்.
  3. 3.0 3.1 3.2 "New faces in Parliament". சண்டே டைம்சு. 18 ஏப்ரல் 2010. http://www.sundaytimes.lk/100418/News/page8.pdf. 
  4. Mathiaparanam, Kajanka. "Colours Awarding Ceremony 2013". கொழும்பு பல்கலைக்கழகம். Archived from the original on 2015-07-21. பார்க்கப்பட்ட நாள் 2015-07-18.
  5. "UOC Colours Awards Ceremony At Water’s Edge". த சண்டே லீடர். 12 சூன் 2011 இம் மூலத்தில் இருந்து 2015-07-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150722044326/http://www.thesundayleader.lk/2011/06/12/uoc-colours-awards-ceremony-at-water%E2%80%99s-edge/. 
  6. "'Minnal Ranga' tipped to cross over to Rajapaksa alliance". தமிழ்நெட். 7 மே 2010. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31706. 
  7. "07COLOMBO728, SRI LANKA: GSL COMPLICITY IN PARAMILITARY". விக்கிலீக்ஸ். 18 மே 2007.
  8. "MTV journalist threatened". டெய்லி நியூஸ். 19 நவம்பர் 2005. http://archives.dailynews.lk/2005/11/19/news30.htm. 
  9. Samarasinghe, Sonali (8 சனவரி 2006). "Maharaja assassination plot thickens". த சண்டே லீடர் இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304072425/http://www.thesundayleader.lk/archive/20060108/spotlight.htm. 
  10. "IFJ condemns death threats against a Shakthi TV journalist". தமிழ்நெட். 21 நவம்பர் 2006. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20351. 
  11. "Threat to Sri Ranga’s life". தி ஐலண்டு. 17 நவம்பர் 2006 இம் மூலத்தில் இருந்து 2014-12-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141214203300/http://www.island.lk/2006/11/17/news8.html. 
  12. "Tamil TV journalist attacked in Nuwara Eliya". தமிழ்நெட். 4 பெப்ரவரி 2010. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31138. 
  13. "Parliamentary General Election - 2010 Nuwara Eliya Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-05-13. பார்க்கப்பட்ட நாள் 2015-07-18.
  14. "General Elections 2010 - Preferential Votes". சண்டே டைம்சு. 11 ஏப்ரல் 2010. http://www.sundaytimes.lk/100411/News/page1.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீ_ரங்கா_ஜெயரத்தினம்&oldid=3554415" இலிருந்து மீள்விக்கப்பட்டது