Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

சென்சௌ 9

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சென்சௌ 9 ஜூன் 16, 2012, அன்று 10:37க்கு ஜியுசுஅன் விண்வெளி ஏவு தளத்திலிருந்து விண்வெளியில் ஏவப்பட்டது. இது முதலாவது மனிதரை ஏற்றிச்சென்று ஏற்கனவே விண்வெளியில் இருந்த தியன்காங் - 1 விண்கலத்துடன் இணைந்த சீன விண்வெளிக்கலம். இதில் முதல் பெண் விண்வெளி வீராங்களை லியு யாங் பயணம் செய்தார். ஜிங் ஹாய்பெங் இரண்டாம் முறையாக அதில் ஆய்வுகளை மேற்கொள்ள பயணம் செய்தார். மூன்றாவதாக லியு வாங் அக்கலத்தின் இணைப்பு பிரிப்பு முயற்சியில் உதவி செய்வதற்காக பயணித்தார். அது சீனாவின் நான்காம் மனிதர்களை ஏற்றிச் சென்ற விண்கலமாகும்.

இந்த விண்கலம், 2012 ஜூன் 18 6:07 உலக நேர அளவில் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருந்த தியன்காங் - 1 கலத்துடன் அன்று இணைந்தது. பின்னர் மூன்று மணி நேரம் கழிந்த பின் ஜிங் ஹாய்பெங் தியன்காங் கலத்திற்குள் நுழைந்தார். ஆறு நாட்கள் கழிந்த பின் லியு வாங்கின் உதவியால் தியன்காங் கலத்திலிருந்து பிரிந்து பூமியை நோக்கிப் புறப்பட்டது சென்சௌ 9. இது சீனர்களின் முதலாவது மனிதர்கள் கொண்ட கல இணைப்பு பிரிப்பு முயற்சியானது.

இருந்த பதின்மூன்று நாள்களில் பலவித ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

பூமியை வலம் வந்த பின், ஜூன், 29, 2012 02:01 உலக நேரத்தின் படி, உள் மங்கோலியாவில் தரை இறங்கியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்சௌ_9&oldid=1582848" இலிருந்து மீள்விக்கப்பட்டது