Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோர்ஜ் கெஸ்தே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்சீரியப் பெண்ணின் ஓவியம்

ஜோர்ஜ் கெஸ்தே (Georges Gasté) ஆகத்து 30, 1869 - 1910) என்பவர் ஒரு பிரெஞ்சு நாட்டு கீழைத்தேய ஓவியரும், நிழற்படக் கலைஞரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவர் 1869ஆம் ஆண்டின் ஆகஸ்ட் முப்பதாம் நாளில் பாரிசில் பிறந்து, 1910ஆம் ஆண்டில் மதுரையில் இறந்தார். இவரது பாட்டனாரும், தந்தையும் கலைப்பொருள் வணிகர்களாக இருந்ததாலோ என்னவோ இளமையிலேயே கீழைத்தேய சித்திரக்கலையில் ஆர்வமுடையவராக இருந்தார். பாரிசில் கலைப்படிப்பை முடித்தார். கீழை நாகரிகத்தால் ஈர்க்கப்பட்டு துனிசியா, அல்ஜீரியா, எகிப்து, பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகளில் விரிவாகப் பயணம் செய்தார். இப்பகுதிகளில் வசித்த மக்களின் முகங்கள் அவரை வெகுவாகக் கவரவே அவர்களின் பல்வேறு உருவப்படங்களை வரையலாயினார். பின்னர் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் வந்தார். 1892-இல் துவங்கி இவ்வாறு அலைந்து திரிந்த அவர் 1908-இல் மதுரையிலேயே தங்கிவிட்டார். உடல்நலம் குன்றி 1910-இல் இயற்கை எய்தினார்.

இவரது நிழற்படங்களும், ஓவியங்களும் நூறு ஆண்டுகளுக்கு முந்தைய கீழைத்தேய வாழ்வை உயிர்ப்புடன் படம்பிடித்துக் காட்டுபவையாக உள்ளன. ஆக்ரா, தில்லி, வாரணாசி, மதுரை உள்ளிட்ட இந்தியாவின் எட்டு நகரங்களின் அரிய காட்சிகளைப் பதிவு செய்துள்ளார்.

உசாத்துணைகள்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோர்ஜ்_கெஸ்தே&oldid=3214321" இலிருந்து மீள்விக்கப்பட்டது