Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோலார்பேட்டை

ஆள்கூறுகள்: 12°34′07″N 78°34′30″E / 12.568700°N 78.574900°E / 12.568700; 78.574900
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை
இருப்பிடம்: ஜோலார்பேட்டை

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°34′07″N 78°34′30″E / 12.568700°N 78.574900°E / 12.568700; 78.574900
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பத்தூர்
வட்டம் திருப்பத்தூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கே. தர்பகராஜ், இ. ஆ. ப
நகர்மன்ற தலைவர்
சட்டமன்றத் தொகுதி ஜோலார்பேட்டை
சட்டமன்ற உறுப்பினர்

க. தேவராசு (திமுக)

மக்கள் தொகை 29,662 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


433 மீட்டர்கள் (1,421 அடி)

குறியீடுகள்


ஜோலார்பேட்டை (ஆங்கிலம்:Jolarpet), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

இதனருகில் ஏலகிரி மலை உள்ளது. இது திருப்பத்தூருக்கு 9 கி.மீ. தொலைவிலும், வேலூருக்கு தென்கிழக்கே 85 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்நகரம் ஜோலார்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

ஜோலார்பேட்டை தொடருந்து நிலையம், சென்னை, சேலம், பெங்களூர், மும்பை, திருவனந்தபுரம், கொச்சி, மங்களூர் போன்ற நகரங்களை இணைக்கும் தென்னக இரயில்வேயின் முக்கிய சந்திப்பாகும். [3]

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 7,140 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 29,662 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 83.3% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,032 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3148 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 961 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,308 மற்றும் 531 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 91.87% , இசுலாமியர்கள் 4.44%, கிறித்தவர்கள் 3.55%, தமிழ்ச் சமணர்கள் 0.0%., மற்றும் பிறர் 0.14% ஆகவுள்ளனர்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. ஜோலார்பேட்டை தொடருந்து நிலையம்
  4. நகர மக்கள்தொகை பரம்பல்

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோலார்பேட்டை&oldid=3853224" இலிருந்து மீள்விக்கப்பட்டது