Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

டிசிப்ரோசியம்(II) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிசிப்ரோசியம்(II) அயோடைடு
இனங்காட்டிகள்
36377-94-3
EC number 622-765-5
InChI
  • InChI=1S/Dy.2HI/h;2*1H/p-2
    Key: SSDFPWIJYIKUFK-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 71431174
  • [I-].[I-].[Dy+2]
பண்புகள்
DyI2
வாய்ப்பாட்டு எடை 416.31 g·mol−1
தோற்றம் அடர் ஊதாக் கருப்பு[1]
உருகுநிலை 659 °செல்சியசு[1]
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் டிசிப்ரோசியம்(II) குளோரைடு
டிசிப்ரோசியம்(II) புரோமைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

டிசிப்ரோசியம்(II) அயோடைடு (Dysprosium(II) iodide) என்பது DyI2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டிசிப்ரோசியமும் அயோடினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

தயாரிப்பு

[தொகு]

டிசிப்ரோசியம்(III) அயோடைடுடன் டிசிப்ரோசியம் உலோகத்தைச் சேர்த்து வெற்றிடத்தில் 800 முதல் 900 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்து டிசிப்ரோசியம்(II) அயோடைடு தயாரிக்கப்படுகிறது.[1]

Dy + 2 DyI3 → 3 DyI2

பாதரச(II) அயோடைடுடன் டிசிப்ரோசியம் வினைபுரிந்தாலும் டிசிப்ரோசியம்(II) அயோடைடு உருவாகிறது:[1]

Dy + HgI2 → DyI2 + Hg

டிசிப்ரோசியமும் அயோடினும் நேரடியாக வினையில் ஈடுபட்டாலும் டிசிப்ரோசியம்(II) அயோடைடு உருவாகிறது:[3]

Dy + I2 → DyI2

பண்புகள்

[தொகு]

டிசிப்ரோசியம்(II) அயோடைடு அடர் ஊதா-கருப்பு நிறத்திலுள்ள ஒரு திடப்பொருளாகும். இது எளிதில் ஈரமுறிஞ்சி நீர்த்துப்போகும். உலர்ந்த மந்த வாயு அல்லது வெற்றிடத்தில் மட்டுமே இதை சேமித்து வைக்க முடியும். காற்றில் இது ஈரப்பதத்தை உறிஞ்சி நீரேற்றாக மாறும். ஆனால் அவை நிலையற்றவை மற்றும் விரைவாக அயோடைடு ஆக்சைடுகளாக மாறி ஐதரசன் வாயுவை வெளியிடும். இந்த செயல்முறை நீர் முன்னிலையில் வேகமாக நிகழ்கிறது. டிசிப்ரோசியம்(II) அயோடைடு சேர்மம் காட்மியம் குளோரைடு போன்ற படிக அமைப்பைக் கொண்டுள்ளது.[1] இது டெட்ரா ஐதரோபியூரான், பியூட்டனால் மற்றும் பீனால் ஆகியவற்றுடன் சேர்ந்து அணைவுச் சேர்மங்களை உருவாக்கும்.[3]

பயன்கள்

[தொகு]

டிசிப்ரோசியம்(II) அயோடைடு மற்றும் சிலிக்கான் டெட்ராகுளோரைடு ஆகியவற்றுக்கு இடையேயான வினையில் டிரைகுளோரோசிலில் இயங்குறுப்புகள் உருவாகின்றன. இவை ஆல்க்கைன்களின் முப்படியாதல் வினையை வினையூக்கம் செய்கின்றன.[4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Handbuch der präparativen anorganischen Chemie. 1 (3., umgearb. Aufl ed.). Stuttgart: Enke. 1975. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-432-02328-1.
  2. "Dysprosium(II) iodide". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
  3. 3.0 3.1 Karl A. Jr. Gschneidner, Jean-Claude Bunzli, Vitalij K. Pecharsky (2009). Handbook on the Physics and Chemistry of Rare Earths. Elsevier. p. 247. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-008093257-6.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  4. Sigma-Aldrich Co., product no. 652423.
  5. Zhu, Zhenyu; Wang, Chuanfeng; Xiang, Xu; Pi, Chengfu; Zhou, Xigeng (2006). "DyI2 initiated mild and highly selective silyl radical-catalyzed cyclotrimerization of terminal alkynes and polymerization of MMA". Chemical Communications (19): 2066–2068. doi:10.1039/b602883g. பன்னாட்டுத் தர தொடர் எண்:1359-7345. பப்மெட்:16767277. http://dx.doi.org/10.1039/b602883g. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிசிப்ரோசியம்(II)_அயோடைடு&oldid=3986614" இலிருந்து மீள்விக்கப்பட்டது