Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

தாருக் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாருக்
Dharug
சிட்னி, லியோரா, தாருக்
நாடு(கள்)ஆத்திரேலியா
பிராந்தியம்நியூ சவுத் வேல்ஸ்
இனம்தாருக், ஈயோரா (யூரா) (கடிகல், வாங்கல், கமரேகல், வாலுமெட்டாகல், பிச்சிலால்)
Extinct20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி
பாமா–நியூங்கன்
  • யூவின்–கூரிச்
    • யோரா
      • தாருக்
        Dharug
பேச்சு வழக்கு
தாருக்
கமரைகல்
இயோரா
மொழிக் குறியீடுகள்
ISO 639-3xdk
மொழிசார் பட்டியல்
xdk.html
AIATSIS[1]S64
மொழிக் குறிப்புsydn1236[2]
{{{mapalt}}}
ஆபத்தில் உள்ள உலக மொழிகளின் யுனெசுக்கோவின் நிலவரை மூலம் தாருக் மிகவும் அருகியதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.
"கோஆலா" என்ற சொல் தாருக், குண்டுங்குரா மொழிகளில் உள்ள 'குலா என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது.
யூவின் தொல்குடி ஆண், அண்.1904

தாருக் மொழி (Dharug language, Darug, Dharuk) என்பது ஆத்திரேலியத் தொல்குடிகளின் யூவின்-கூரிக் குழுவின் ஒரு மொழி ஆகும். இது சிட்னி மொழி (Sydney language) அல்லது கடிகல் மொழி (Gadigal language) எனவும் அழைக்கப்படுகிறது. இம்மொழி நியூ சவுத் வேல்சு மாநிலத்தின் சிட்னி மாநகரில் குடியேறிகளின் வருகையின் விளைவாக அழியும் வரை தொல்குடியினரால் பாரம்பரியமாகப் பேசப்பட்டு வந்தது. இது தாருக் மக்களின் பாரம்பரியமான மொழி ஆகும். ஆங்கிலேயக் குடியேற்றத்தின் தொடக்கத்திலிருந்து தாருக் மக்கள்தொகை வெகுவாகக் குறைந்துள்ளது.[3][4] "ஈயோரா என்ற சொல் சில சமயங்களில் கடலோரப் பேச்சுவழக்கை உள்ளுறை பேச்சுவழக்கில் இருந்து வேறுபடுத்தப் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் தொல்குடியின மக்கள் ஈயோரா ("மக்கள்" என்று பொருள்) என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.[5] மொழியின் புனரமைக்கப்பட்ட வடிவத்தைப் புதுப்பிக்க சில முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

இன்று பிற மொழிகளில் வழக்கிலேறி வாழும் சில சொற்கள்

[தொகு]

இன்று ஆங்கிலத்தில் வழக்கிலுள்ள சில தாருக் மொழி சொற்கள் வருமாறு:

  • விலங்குகளின் பெயர்கள்: டிங்கோ, கோவாலா, வாலபி
  • மரங்களும் தாவரங்களும்: புராவாங்கு (burrawang), குராசோங்கு Kurrajong, வராட்டா
  • ஆயுதங்கள்: பூமராங், வூமெரா[6]
  • இடங்கள்: மல்கோவா, தூங்காபி, வின்மாலி

மேற்கோள்கள்

[தொகு]
  1. S64 தாருக்
    Dharug at the Australian Indigenous Languages Database, Australian Institute of Aboriginal and Torres Strait Islander Studies
  2. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "சிட்னி". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  3. Troy (1994): p. 5.
  4. Troy, Jakelin. 2019. The Sydney language [blurb]. 2nd edition. Canberra : Aboriginal Studies Press. "சிட்னி நகரப் பகுதியில் உள்ள காடிகல் மற்றும் மேற்கு சிட்னியில் உள்ள தாருக் உள்ளிட்ட பல குலப்பெயர்களால் இந்த மொழி இப்போது அழைக்கப்படுகிறது. இந்த மொழியில் தொல்குடியினரின் சொல் 'யூரா', இச்சொல் மொழியை அடையாளம் காண உதவும். மிகவும் பொதுவான எழுத்துப்பிழைகள் ஐயோரா, ஈயோரா ஆகியவை."
  5. S61 Eora at the Australian Indigenous Languages Database, Australian Institute of Aboriginal and Torres Strait Islander Studies
  6. boomerang.org.au பரணிடப்பட்டது 2009-02-08 at the வந்தவழி இயந்திரம்; see under "The Origin of Boomerang". Retrieved சனவரி 16, 2008.

உசாத்துணைகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாருக்_மொழி&oldid=4083673" இலிருந்து மீள்விக்கப்பட்டது