Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குளந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
பெருங்குளம் பெருமாள் கோவில்
புவியியல் ஆள்கூற்று:8°38′30″N 77°59′38″E / 8.641795°N 77.993950°E / 8.641795; 77.993950
பெயர்
புராண பெயர்(கள்):திருக்குளந்தை
பெயர்:பெருங்குளம் பெருமாள் கோவில்
அமைவிடம்
ஊர்:திருக்குளந்தை
மாவட்டம்:தூத்துக்குடி
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சோர நாதன்(மாயக்கூத்தன்)
தாயார்:குளந்தை வல்லித்தாயார் (கமலாதேவி), அலமேலு மங்கைத் தாயார்
தீர்த்தம்:பெருங்குளம்
மங்களாசாசனம்
பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:நம்மாழ்வார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
விமானம்:ஆனந்த நிலைய விமானம்
கல்வெட்டுகள்:உண்டு

பெருங்குளம் பெருமாள் கோவில் என்றழைக்கப்படும் திருக்குளந்தை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இறைவன் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் மாயக் கூத்தன் என்ற பெயரில் அறியப்படுகிறார். இவருக்கு சோர நாதன், சீனிவாசன் என்ற பெயர்களும் உள்ளன. இறைவி குளந்தை வல்லித் தாயார் என்றும் கமலாதேவி என்றும் அறியப்படுகிறார். இவருடன் அலமேலு மங்கைத் தாயாரும் உள்ளார்.

இக்கோவிலின் தீர்த்தம் பெருங்குளம் என்றும் அறியப்படுகிறது. இக்கோவிலின் விமானம் ஆனந்த நிலைய விமானம் எனும் அமைப்பைச் சார்ந்தது.

ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் இத்தலம் குறித்து பாடியுள்ளார். அதனால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாக புகழப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம்.{{cite book}}: CS1 maint: extra punctuation (link)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்குளந்தை&oldid=3688316" இலிருந்து மீள்விக்கப்பட்டது