Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

பண்பியல் ஓவியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
On White 2, 1924, by Kandinsky

தற்காலத்தில் பண்பியல் ஓவியம் (Abstract art) என்பது, உலகப் பொருட்களை வரையாமல், நிறங்களையும், வடிவங்களையும் பயன்படுத்தி வரையப்படும் ஓவியமாகப் புரிந்து கொள்ளப்படுகின்றது. ஆனால், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இயல்பான உருவங்களை எளிமையான வடிவில், அவற்றின் உலக இயல்பு குறைக்கப்பட்ட நிலையில் வரைவதையே குறித்தது. இந்த ஓவியங்கள் உலகப் பொருட்களை நேரடியாக அல்லாமல் மறைமுகமாக வெளிக்காட்டின. அக்காலத்தைச் சேர்ந்த கியூபிசம் மற்றும் இது போன்ற பிற கலை இயக்கங்கள் சார்ந்த ஓவியங்கள் இந்த அடிப்படையிலேயே அமைந்திருந்தன. இவ்வாறான நுட்பம், உலகப் பொருட்களின், வெளித் தோற்றத்துக்குப் புலப்படாத, உள்ளார்ந்த பண்புகளை ஓவியத்தில் கொண்டு வருவதற்கு உதவியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்பியல்_ஓவியம்&oldid=2220821" இலிருந்து மீள்விக்கப்பட்டது