Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

பவானிசாகர் அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பவானிசாகர் அணை
பவானிசாகர் அணையும் நீர்தேக்கமும்
அதிகாரபூர்வ பெயர்பவானிசாகர் அணைக்கட்டு
அமைவிடம்பவானிசாகர், ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா
புவியியல் ஆள்கூற்று11°28′15″N 77°6′50″E / 11.47083°N 77.11389°E / 11.47083; 77.11389
கட்டத் தொடங்கியது1948
திறந்தது1955
அணையும் வழிகாலும்
தடுக்கப்படும் ஆறுபவானி ஆறு
உயரம்32 m (105 அடி)
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்பவானிசாகர் நீர்தேக்கம்

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக வரும் பவானி ஆற்றுடன் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மோயாறு கலக்கும் இடத்தில் கீழ் பவானி திட்டம் மூலம் அணை கட்டப்பட்டுள்ளது. இதனால் உண்டான நீர்தேக்கத்திற்கு பவானி சாகர் நீர்தேக்கம் என்று பெயர். நாடு விடுதலை அடைந்தபிறகு உருவான இத்திட்டம் 1956 இல் நிறைவடைந்தது. இந்த அணை பவானிசாகர் அணை என்றே அழைக்கப்படுகிறது. இவ்வணை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் என்ற கிராமத்திற்கு அருகில் கட்டப்பட்டுள்ளது. இது ஒரு மண் அணையாகும். இதன் உயரம் 105 அடி, இதன் கொள்ளளவு 33 கோடி கனஅடியாகும். இதன் நீர்ப்பிடிப்பு பகுதி 1621.5 சதுர மைல் ஆகும். நீர்தேக்கத்தின் பரப்பளவு 30 சதுர மைல்களாகும். [1]. அணை உள்ள இடத்தில் உள்ள நகர் அணையின் பெயராலயே பவானிசாகர் என அழைக்கப்படுகிறது, இது ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வணையிலிருந்து செல்லும் கீழ் பவானி திட்ட கால்வாய் ஈரோடு மாவட்டத்தை வளப்படுத்துகிறது.

அணையின் கொள்ளளவும் பாசன வசதியும்[தொகு]

பவானி சாகர் அணையின் கொள்ளளவு 32.8 டி.எம்.சி ஆகும். பவானி சாகர் அணையின் மூலம் புதிய ஆயக்கட்டு 2.07 லட்சம் ஏக்கர் பாசனம் பெறுகிறது. இப்புதிய ஆயக்கட்டு இரு பகுதிகளாக [ ஒற்றை படை, இரட்டை படை மதகுகள்] பிரிக்கப்பட்டு, ஆண்டுதோறும் ஒரு பகுதிக்கு [ 1,03 ,500 ஏக்கர்] நெல்லுக்கும், மறு பகுதிக்கு புஞ்சை பயிருக்கும், மாறி மாறி பாசனம் பெருகிறது. நெல்லுக்கு 24 டி.எம்.சி நீரும், புஞ்சை பயிருக்கு 12 டி.எம்.சி நீரும் ஆகமொத்தம் 36 டி.எம்.சி நீர் தேவை படுகிறது. இவ்வணையின் மூலம் பழைய ஆயகட்டுகளான தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பகுதிகள் பவானி சாகர் அணைக்கு கீழுள்ள கொடிவேரி அணைக்கட்டு மூலமும், காளிங்கராயன் அணைக்கட்டு மூலம், காளிங்கராயன் பாசன பகுதியும், பாசனம் பெருகிறது. அவைகளுக்கு ஆண்டுதோறும் 24 டி.எம்.சி நீர் தேவை படுகிறது. கொடிவேரி அணைக்கட்டு மூலம் 25 ,000 ஏக்கரும் , காளிங்கராயன் அணைக்கட்டு மூலம் 15 ,000 ஏக்கரும், பாசனம் பெறுகிறது

புனல்மின் நிலையம்[தொகு]

இந்த அணையில் இரண்டு நீர் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன, ஆற்றிற்கு நீர் வழங்கிடும் (MHPH) நுண்புனல் மின்நிலையத்தில் 8 மெகாவாட் திறனிலும் (RBC PH) வலதுகரை வாய்க்கால் மின்நிலையத்தில் 8 மெகாவாட் திறனிலும் என மொத்தம் 16 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.

16 32 மெகாவாட் (43,000 ஹெச்பி) திறனைக் கொண்டு, மொத்தமாக ஐந்து மெகாவாட் (21,000 ஹெச்பி) ஒரு திறனோடு உள்ளன.[2]

வரலாற்றுச்சிறப்பு[தொகு]

தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை என்னும் சிறப்பிற்குரியது பவானிசாகர் அணைக்கட்டு. ஆசியாவிலேயே மிக நீளமான மண் அணையும் இதுதான். டணாய்க்கன்_கோட்டை என்றழைக்கப்படும் வரலாற்றுச்சிறப்பு மிக்க ஓர் கோட்டை அணை நீருக்குள் மூழ்கியுள்ளது. கோடைக்காலங்களில் அணையில் நீர் வற்றிய பிறகு அந்தக் கோட்டையை காண இயலும்.

ஹொய்சாளர் ஆட்சிக்காலத்தில் படைத்தளபதியான பெருமாள் தண்டநாயக்கனைப் பாராட்டி வழங்கப்பட்ட குறுநிலத்தை அவன் ஆண்டு வந்த போது கி.பி 1254ஆம் ஆண்டு ஆற்றுச்சமவெளியில் இந்தக் கோட்டையைக் கட்டி ஆண்டான். தண்டநாயக்கன் கோட்டை நாளடைவில் டணாயக்கன் கோட்டை ஆனது. பல நூறு ஆண்டுகள் ஆன பின்பும் கூட இன்னும் உறுதியுடன் இக்கோட்டை உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2009-04-09. பார்க்கப்பட்ட நாள் 2009-11-29.
  2. Uniqueness of Bhavanisagar dam. CSTI. http://www.cstibhavanisagar.org/pdf/csti/UNIQUENESS%20OF%20BHAVANISAGAR%20DAM.pdf. பார்த்த நாள்: 1 February 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவானிசாகர்_அணை&oldid=3760801" இலிருந்து மீள்விக்கப்பட்டது