Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

ரோஸ்மேரி ரோஜர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோஸ்மேரி ரோஜர்ஸ்
பிறப்பு7 திசம்பர் 1932
பாணந்துறை
இறப்பு12 நவம்பர் 2019 (அகவை 86)
Carmel-by-the-Sea
படித்த இடங்கள்
பணிபுதின எழுத்தாளர்
பாணிகாதற் புதினம்

ரோஸ்மேரி ரோஜர்ஸ் (Rosemary Rogers 7 திசம்பர் 1932)    இலங்கையில் பிறந்த ஆங்கில எழுத்தாளர் மற்றும் புதின ஆசிரியர் ஆவார். வரலாற்றுக் காதல் கதை புதினங்கள் எழுதியவர். சுவிட் சாவேஜ் லவ் என்ற இவருடைய முதல் புத்தகம் 1974 இல் வெளிவந்தது. இவரது இயற் பெயர் ரோஸ் ஜான்ஸ் ஆகும். [1]

வாழ்க்கைக் குறிப்புகள்

[தொகு]

இலங்கையில் பனத்துரா என்னும் ஊரில் டச்சு- போர்ச்சுக்கீஸ் கலப்பின பரங்கியர் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் பள்ளிகளை நடத்தி வந்தார்கள்  எட்டு அகவை இருக்கும்போதே ரோஸ்மேரி எழுதத் தொடங்கினார். இலங்கையில் உள்ள ஒரு செய்தித்தாள் நிறுவனத்தில் சில காலம் எழுத்தாளராகப் பணி புரிந்தார்.

சிலோன் பல்கலைக் கழகத்தில்  மூன்றாண்டுகள் கல்வி பயின்ற பிறகு செய்தியாளராக இருந்தார். சூமா நவரத்தினம் என்னும் விளையாட்டு வீரரை மணந்தார்  சில ஆண்டுகளில் இருவரும் பிரிந்து விட்டார்கள். பின்னர் தம் பெண் மக்கள் இருவரை அழைத்துக் கொண்டு 1960இல் லண்டனுக்குப் புறப்பட்டார்.

ரோஸ்  மேரி அமெரிக்கவைச் சேர்ந்த லெராய் ரோஜர்ஸ் என்பவரை ஐரோப்பாவில்  சந்தித்தார். அவரை   செயின்ட் லூயிஸ் மிசூரியில் திருமணம் செய்து கொண்டார்.  கலிபோர்னியாவில் குடும்பம் அமைந்தது.  இவ்வாழ்க்கை எட்டு ஆண்டுகள் நீடித்தது  பின்னர் 1969 இல் ரோஸ்மேரியின் பெற்றோர் வந்து இவருடன் தங்கினார்கள்  1984 செப்டம்பரில் மூன்றாவது முறையாக கிறிஸ்தாபர் கடிசன் என்பவரை மணந்தார்.

எழுத்துப் பணி

[தொகு]

சிறுமியாய் இருந்தபோது எழுதிய படைப்புகளை திரும்பப் படித்து நிறைவு ஏற்படும் வரை திருத்தி எழுதினார். இவருடைய முதல் புதினம் சுவீட் சாவேஜ் லவ் மிகப் பெரிய அளவில் விற்பனை ஆனது. இரண்டாவது புதினம் டார்க் பயர்ஸ் பல இலட்சக்கணக்கான படிகள் விற்றன. முதல் மூன்று புதினங்களும் சேர்ந்து பத்து மில்லியன் படிகள் விற்றன. நாலாவது புத்தகம் விக்கட் லவ்விங் லைஸ் மூன்று மில்லியன் படிகள் விற்றன. ரோஸ்மேரி ரோஜர்ஸ் எழுதிய படைப்புகள் 25க்கும் மேல் உள்ளன.[2]

மேற்கோள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோஸ்மேரி_ரோஜர்ஸ்&oldid=2734807" இலிருந்து மீள்விக்கப்பட்டது