Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

வகைப்படுத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வகைப்படுத்தல் என்பது ஒத்த பண்புள்ள உறுப்பினர்களை (பொருட்கள், கருத்துக்கள்) ஒரு குறிப்பிட்ட நோக்குக்காக ஒரு வகைக்குள் அல்லது பகுப்புக்குள் சேர்த்தல் ஆகும். வகைப்படுத்தல் பொருட்களை அல்லது கருத்துக்களை அடையாளப் படுத்தி, வேறுபடுத்தி புரிந்து கொள்ள உதவுகிறது. மனிதன் சிந்திக்கையில் வகைப்படுத்தல் ஓர் இயல்பான அடிப்படைச் செயற்பாடு. முறைப்படுத்தி துல்லியமாக வகைப்படுத்துவது ஒரு சிக்கலான செயற்பாடு. உயிரினங்கள், வேதிப் பொருட்கள், வானியல் பொருட்கள், கல்வித்துறைகள், நூல்கள், மொழிகள், தொழிற்துறைகள், நோய்கள் என பலவகைப் பொருட்களை வகைப்படுத்துதல் அவசிமாகிறது.

தனிம அட்டவணை
ஆல்சைமர் நோய்
Classification and external resources
ஐ.சி.டி.-10 G30., F00.
ஐ.சி.டி.-9 331.0, 290.1
OMIM 104300
DiseasesDB 490
MedlinePlus 000760
ஈமெடிசின் neuro/13 
MeSH D000544

வகைப்படுத்தல் ஏன் தேவை[தொகு]

ஒழுங்கமைப்பு[தொகு]

வகைப்படுத்துதல் பெருந்தொகை தகவலை பிரித்து ஒழுங்குபடுத்திக் கையாள உதவுகிறது. எ.கா உலகில் பல மில்லியன் உயிரினங்கள் வசிக்கின்றன. பாரை மீன் என்றவுடன், அது நீரில் வாழும், அதை சில வேளை மனிதர் உணவாகக் கொள்ளலாம் என்று ஊகிக்க முடியும். இதற்கு வகைப்படுத்தல் ஒழுங்கமைப்பு உதவுகிறது.

மீட்டெடுத்தல்[தொகு]

ஒரு நூலகத்தில் பல்லாயிரக்கணக்கான நூல்கள் உள்ளன. புது நூல்கள் மேலும் சேர்க்கப்படலாம். நூல்கள் வெளியிடப்படும் அல்லது கிடைக்கும் காலப்படி வரிசையாக ஒழுங்கமைத்தால், ஒரு குறிப்பிட்ட துறை பற்றி அறிய நூல்களை மீட்டெப்பது சிரமமாகும். ஆகையால் நூல்கள் துறை/தகவல் வாரியாக இலக்கங்கள் இட்டு வகைப்படுத்தப்படுகின்றன. கணினியில் மீட்டெடுத்தல் தேடல் மூலம் இலகுவாக்கப்பட்டாலும், தகவலை browse செய்ய வகைப்படுத்தல் உதவுகிறது.

வரையறைகள், உறவுகள்[தொகு]

வகைப்படுத்தல் மூலம் ஒவ்வொரு உறுப்புக்களுக்கும் இடையே உள்ள உறவு பற்றி தெளிவாக வரையறைகளை செய்ய முடியும்.

துறை வாரியாக வகைப்படுத்தல் முறைமைகள்[தொகு]

உயிரினங்கள்[தொகு]

முதன்மைக் கட்டுரை: உயிரினங்களின் அறிவியல் வகைப்பாடு

வேதியியல்[தொகு]

வானியல்[தொகு]

கணிதம் கல்வித்துறை[தொகு]

கணித இயல் வகைப்பாடு

நோய்கள்[தொகு]

நோய்களுக்கும் தொடர்புடைய நலச் சிக்கல்களுக்குமான சர்வதேச புள்ளிவிவர வகைப்பாடு

நூலகம்[தொகு]

மொழிகள்[தொகு]

முதன்மைக் கட்டுரை: மொழிகளும், மொழிக் குடும்பங்களும்

தொழிற்துறைகள்[தொகு]

அனைத்துலக தொழிற்துறை வகைப்பாடு சீர்தரம்

வகைப்படுத்தல் சிக்கல்கள்[தொகு]

ஒரு நூலகத்தில் பல்லாயிரக்கணக்கான நூல்கள் உள்ளன. புது நூல்கள் மேலும் சேக்கப்படலாம். நூல்கள் வெளியிடப்படும் அல்லது கிடைக்கும் காலப்படி வரிசையாக ஒழுங்கமைத்தால், ஒரு குறிப்பிட்ட துறை பற்றி அறிய நூல்களை மீட்டெப்பது சிரமாகும். ஆகையால் நூல்கள் துறை/தகவல் வாரியாக இலக்கங்கள் இட்டு வகைப்படுத்தப்படுகின்றன. கணினியில் மீட்டெடுத்தல் தேடல் மூலம் இலகுவாக்கப்பட்டாலும், தகவலை browse செய்ய வகைப்படுத்தல் உதவுகிறது.

இவற்றையும் பாக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வகைப்படுத்தல்&oldid=3227682" இலிருந்து மீள்விக்கப்பட்டது