Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

வடா பாவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடா பாவ்
வகைநொறுக்குத்தீனி
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிமகாராட்டிரம், குசராத்
முக்கிய சேர்பொருட்கள்உருளைக் கிழங்கு, இஞ்சி, பச்சை மிளகாய்

வடா பாவ் என்பது ஒரு சைவ உணவாகும். இவ்வகை உணவு மகாராட்டிரம் மற்றும் குசராத்[1] பகுதிகளில் மிகவும் பரவலான நொறுக்குத்தீனி வகை உணவாகும். இதில் உருளைக் கிழங்கு போண்டாவும் (வடை அல்லது வடா என்று கூறுவர்) வெதுப்பியும் (உரொட்டி) இருக்கும். இதனுடன் நன்கு எண்ணெயில் வறுத்த பச்சை மிளகாயை உடன் சேர்த்து சாப்பிடுவது வழக்கமாக உள்ளது. வடா பாவ் என்பதில் வடா என்பது வடையையும் (போண்டாவையும்) பாவ் என்பது வெதுப்பியையும் குறிக்கும்.

மேலும் பார்க்க

[தொகு]

குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]
  1. "வடா பாவ்". Archived from the original on 2012-09-08. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடா_பாவ்&oldid=3831685" இலிருந்து மீள்விக்கப்பட்டது