Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்கியா
வலைத்தள வகைwiki
உரிமையாளர்ஜிம்மி வேல்சு
உருவாக்கியவர்ஜிம்மி வேல்சு மற்றும் ஆஞ்செலா பீஸ்லி
தற்போதைய நிலைநல்ல இயக்கத்தில் உள்ளது
உரலிhttp://www.wikia.com


விக்கியா என்பது எவரும் ஒரு விக்கியைத் துவங்க வகைசெய்யும் இணையதளம் ஆகும். இது 2004 ஆம் ஆண்டு ஜிம்மி வேல்சு மற்றும் ஆஞ்செலா பீஸ்லி ஆகியோரால் துவங்கப்பட்டது. முதலில் விக்கிசிட்டீஸ் என்று அழைக்கப்பட்ட இது 27.03.06 அன்று விக்கியா எனப் பெயர் மாற்றம் பெற்றது.

விக்கியாவில் உள்ள அனைத்து உள்ளடக்கங்களும் குனூ வகை பதிப்புரிமை அல்லது கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமங்கள் கொண்டவை ஆகும். எனவே யாரும் ஒரு விக்கியைத் தொகுக்கலாம். ஒரு விக்கியை யாரும் சொந்தம் கொண்டாடவோ தானே அதன் தலைவர் என்றோ சொல்ல முடியாது.

மீடியாவிக்கி மென்பொருளைப் பயன்படுத்தியே விக்கியா தளம் இயங்குகிறது.

விக்கியா தளம் தனக்குத் தேவையான பணத்தை விளம்பரங்கள் மூலம் பெறுகிறது. விக்கிப்பீடியாவோ தனக்குத் தேவையான பணத்தை நன்கொடைகள் மூலம் மட்டுமே பெறுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கியா&oldid=3931772" இலிருந்து மீள்விக்கப்பட்டது