BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்-மீண்டும் அமைச்சர் ஆவாரா?
தமிழ்நாட்டின் முன்னாள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூன்று பேர் கொண்ட உச்சநீதிமன்ற உத்தரவு இன்று (வியாழன், செப்டம்பர் 26) ஜாமின் வழங்கியுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். நீண்ட காலமாக ஜாமீன் வழங்கப்படாமல் அவர் சிறையில் இருப்பதால் மனித உரிமைகளை கருத்தில் கொண்டு அவர் விடுவிக்கப்பட்டிருப்பதாக செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
லெபனான் மற்றொரு காஸாவாக மாறுகிறதா? இஸ்ரேலிய தாக்குதலின் நோக்கம் என்ன?
தீவிரமான நடவடிக்கைகள் மூலமாக தங்களுடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு ஹெஸ்பொலாவை கட்டாயப்படுத்த முடியும் என இஸ்ரேல் நம்புகிறது. ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மற்றும் இரானில் உள்ள அவரது கூட்டாளிகள் மற்றும் ஆதரவாளர்கள் எதிர்ப்பின் விலை மிக அதிகம் என்று முடிவு செய்யும் அளவுக்கு இஸ்ரேல் வலியை ஏற்படுத்த விரும்புகிறது. இஸ்ரேல் மீது ராக்கெட்டுகள் ஏவுவதை ஹெஸ்பொலா நிறுத்த வேண்டும் என நெதன்யாகு விரும்புகிறார். எல்லையிலிருந்து ஹெஸ்பொலாவைத் திருப்பி அனுப்ப விரும்புவதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.
இலங்கை: ராஜபக்ஸ ஆட்சியை வீழ்த்திய போராட்டக்காரர்கள் அநுரவிடம் எதிர்பார்ப்பது என்ன?
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக காலி முகத்திடலில் நீண்ட போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இந்த ஆட்சி மாற்றத்தை எப்படி பார்க்கின்றனர்? புதிய ஜனாதிபயிடமிருந்து அவர்கள் எதிர்பார்ப்பது என்ன? இதனை அறிந்துகொள்ள, மக்களின் எதிர்பார்ப்பு, இந்த ஆட்சி மாற்றத்தின் ஊடாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா, அவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்று காலி முகத்திடல் போராட்டத்தை நடத்திய போராட்டக்காரர்களிடம் பிபிசி தமிழ் வினவியது.
திருப்பதி லட்டு சர்ச்சை: கலப்பட நெய்யை வீட்டிலேயே கண்டறிவது எப்படி?
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் செய்ததாக எழுந்த சர்ச்சை தற்போது பூதாகரம் ஆகியுள்ளது. இந்நிலையில் கலப்பட நெய்யைக் கண்டறிவது எப்படி என்ற கேள்வி அனைவரது மனதிலும் தோன்றியிருக்கிறது.
காணொளி, பசியால் இறக்கும் நிலையில் இருந்தவர் ‘கே-பாப்’ பாடகரானது எப்படி?, கால அளவு 3,21
வட கொரியர்கள் அடங்கிய முதல் கே-பாப் நடனக்குழுவின் அறிமுக நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது.
ஆதவ் அர்ஜுன் பேச்சு திமுக, விசிக கூட்டணியை பாதிக்குமா? திருமாவளவன் கூறியது என்ன?
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படலாம் என்று பேச்சுகள் எழும் நிலையில், அதிகாரப் பகிர்வு குறித்து திமுகவின் கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி குரல் எழுப்பி வருகிறது. இதுகுறித்த ஆதவ் அர்ஜுனின் பேச்சுக்கு திமுகவின் எதிர்வினை என்ன? இது கூட்டணியை பாதிக்குமா?
காஷ்மீர் விஷயத்தில் ஐ.நா.வில் மௌனம் காத்த துருக்கி அதிபர் - இந்தியாவுக்கு கிடைத்த வெற்றியா?
பல ஆண்டுகளாக காஷ்மீர் குறித்து ஐ.நா பொதுச் சபையில் பேசி வந்த துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்துவான், இந்த ஆண்டு செப்டம்பர் 24 அன்று ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றும்போது காஷ்மீர் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஏன்?
லெபனான்: இஸ்ரேல் தாக்குதலால் தலைநகர் நோக்கிப் படையெடுக்கும் மக்கள் - புகைப்படத் தொகுப்பு
ஹெஸ்பொலா உருவாக்கியுள்ள ராணுவ கட்டமைப்புகளைக் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. இந்தத் தாக்குதல்கள் காரணமாக லெபனானில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடம் தேடி இடம்பெயர்ந்து வருகின்றனர்.
சென்னை: உதட்டுச்சாயம் பூசியதால் பெண் தபேதார் பணியிட மாற்றமா? மேயர் பிரியா கூறுவது என்ன?
பெருநகர சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதாரான பி.எஸ். மாதவி பளிர் நிறத்தில் உதட்டுச்சாயம் பூசிய காரணத்திற்காகப் பணி இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உண்மை என்ன?
லாபட்டா லேடீஸ் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டதைத் தொடர்ந்து திரையுலகில் எழும் சர்ச்சைகள்
இந்த ஆண்டு சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் ‘லாபட்டா லேடீஸ்’ என்ற ஹிந்தி திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக இந்திய திரைப்படக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இந்தியா மீது இரான் கோபம் - இருநாட்டு உறவில் பாகிஸ்தான் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன? ஓர் அலசல்
சமீபத்தில் இரானின் உச்ச தலைவர் சையத் அலி காமனேயி இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் நிலை குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
WWE, அழகிப் போட்டி, ரியல் எஸ்டேட் என பிசியாக இருந்த டிரம்ப் அரசியலில் நுழைந்ததன் பின்னணி
அமெரிக்க அதிபர் பதவிக்கு தொடர்ச்சியாக மூன்று முறை போட்டியிடுவதற்கு முன்பே, டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் மிகவும் பகட்டான கோடீஸ்வரராக இருந்தார். ரியல் எஸ்டேட் முதல் அமெரிக்க அரசியல் அவரை, அவரது வாழ்க்கைப் பயணத்தை விரிவாகப் பார்க்கலாம்.
சிறப்புப் பார்வை
இலங்கையில் அரசியல் குடும்ப பின்னணி இல்லாத முதல் பெண் பிரதமர் - இவர் சாதித்தது எப்படி?
இலங்கையில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய புதிய பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இதற்குமுன் பிரதமர்களாக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருக்குப் பிறகு, அரசியல் குடும்பப் பின்னணி இல்லாமல் பிரதமரான ஹரிணி அமரசூரிய யார்?
ஒரே நாடு ஒரே தேர்தல்: மாநில கட்சிகளை நெருக்கடியில் தள்ளுமா? சாதக, பாதகங்கள் பற்றிய ஒரு விவாதம்
'ஒரு நாடு, ஒரே தேர்தல்' மீண்டும் மக்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரவை, இந்த சட்டம் தொடர்பான உயர் மட்டக் குழுவினரின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான முக்கியமான நடவடிக்கையாக இது இருக்கும் என்று மத்திய அரசு எதிர்பார்க்க, எதிர்க்கட்சியினர் இதில் உள்ள சிக்கல்களை மேற்கோள்காட்டி வருகின்றனர். இதில் உள்ள சாதக பாதங்கள் குறித்து விவாதங்களை அரசியல் கட்சித் தலைவர்கள் முன்வைக்கின்றனர்.
திருப்பதி லட்டு சர்ச்சை: தமிழ்நாட்டு நிறுவனத்தின் நெய்யில்தான் கலப்படமா? முழு விவரம்
திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாட்டு நிறுவனத்தின் நெய்யில்தான் கலப்படமா? முழு விவரம்
சிறார் ஆபாசப் பட வழக்கு: சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது ஏன்?
குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்கள் குறித்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். அதன் முழு விவரம் என்ன?
'ரா' உளவு அமைப்பு உருவாக பாகிஸ்தான் போர் எவ்வாறு வழிவகுத்தது? ஏஜெண்ட் தேர்வு எப்படி நடக்கிறது?
இந்திய உளவு அமைப்பான 'ரா' 1968-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. நாட்டிற்கு வெளியே உளவுத்தகவல்களை சேகரிப்பது இதன் பொறுப்பாகும். அமைப்பு உருவாக பாகிஸ்தான் போர் வழிவகுத்தது எப்படி? ஏஜெண்டுகளை எவ்வாறு தேர்வு செய்கிறார்கள்?
கன்னித்தன்மை, கன்னித்திரை பற்றிய தமிழ்நாட்டுப் பெண்களின் பார்வை
கன்னித்தன்மை என்பது பெண்ணின் புனிதம், பாலியல் தூய்மை அல்லது ஒழுக்கத்தின் குறியீடாகவே நீண்ட காலமாகக் கருதப்படுகிறது. ஆனால், உண்மை அப்படி இல்லை என்கின்றனர் பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள். கன்னித்தன்மை, கன்னித்திரை பற்றிய அவர்களின் கருத்து என்ன?
ஆங்கிலேயரை வென்ற இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார் - எப்படி சாதித்தார்?
ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து போரில் வெற்றி பெற்ற இந்தியாவின் முதல் ராணி என்ற பெருமை வீர மங்கை வேலு நாச்சியாருக்கு உண்டு. மைசூர் மன்னர் ஹைதர் அலி உதவியுடன் ஆங்கிலேயர்களை அவர் வென்றது எப்படி? போரில் குயிலி என்ன ஆனார்?
மொசாட் அமைப்பின் ஆச்சரியமூட்டும் வெற்றிகள், அதிர்ச்சிகரமான தோல்விகள் - ஒரு பார்வை
ஒரு அதிர்ச்சியூட்டும் நடவடிக்கையாக ஹெஸ்பொலா அமைப்பின் உறுப்பினர்கள் பயன்படுத்தும் பேஜர்கள் மற்றும் பிற தகவல் தொடர்பு சாதனங்கள் வெடி குண்டுகளாக மாறின. இஸ்ரேலின் மேம்பட்ட கண்காணிப்பில் இருந்து தப்பிக்க ஹெஸ்பொலா அமைப்பினர் பயன்படுத்திய தகவல் தொடர்பு சாதனங்கள் வெடித்ததன் காரணமாக டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர், பல ஆயிரம் பேர் காயமடைந்தனர்.
ஷேக் ஹசீனா அரசு கவிழ்ந்த பிறகு பாகிஸ்தானை நெருங்குகிறதா வங்கதேசம்?
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசு கவிழ்ந்த பிறகு பாகிஸ்தான் தொடர்பான வங்கதேசத்தின் ராஜதந்திர நடவடிக்கைகளில் ஏதேனும் மாற்றம் வருமா? வங்கதேசத்தின் மீது பாகிஸ்தானுக்கு ஆர்வம் உள்ளதா? பாகிஸ்தான் உடனான உறவால் வங்கதேசம் எப்படி பயனடையும்?
சிந்து சமவெளி: சங்க இலக்கியத்தோடு ஒத்துப்போகும் வாழ்வியலை கொண்ட பண்டைய நாகரிகம்
இந்திய துணைக் கண்டத்தின் தொல்லியல் வரலாற்றில், சிந்து சமவெளி கண்டறியப்பட்டது மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. சிந்து சமவெளி கண்டறியப்பட்டது குறித்த அறிவிப்பு வெளியாகி இன்றோடு நூறு ஆண்டுகளாகின்றன. இதன் முக்கியத்துவம் என்ன?
சந்திரயான்-4 திட்டம் தயார் - இஸ்ரோ அனுப்பும் விண்கலம் நிலவில் என்ன செய்யும்?
சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து சந்திரயான்-4 திட்டத்திற்கு இந்தியா தயாராகி வருகிறது. இந்த சந்திரயான்-4 திட்டத்தின் நோக்கம் என்ன? அது எவ்வாறு செயல்படுத்தப்படும்?
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைவது எப்படி? அதனால் உங்களுக்கு என்ன பலன்?
பிபிசி தமிழின் முக்கிய பிரேக்கிங் செய்திகள், ஆழமான கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகளை இனி உங்கள் வாட்ஸ்ஆப்பிலேயே நீங்கள் பெறலாம்.
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
இஸ்ரேல் – பாலத்தீனம் மோதல்
காணொளி
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்