பாலத்தீன மக்களுக்காக ஜெர்மனியிலிருந்து காஸா வரை சைக்கிள் பயணம் செய்யும் இளைஞர் - காணொளி

காணொளிக் குறிப்பு, அபேத் ஹாசன், சைக்கிள் மூலமாக காஸாவை அடையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
பாலத்தீன மக்களுக்காக ஜெர்மனியிலிருந்து காஸா வரை சைக்கிள் பயணம் செய்யும் இளைஞர் - காணொளி

எச்சரிக்கை: சில காட்சிகள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

அபேத் ஹாசன், ஜெர்மனியில் உள்ள தனது வீட்டிலிருந்து சைக்கிள் மூலமாக காஸாவை அடையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அபேத்தைப் பொறுத்தவரை, இந்தச் சைக்கிள் பயணம் மிகவும் முக்கியமானது.

“சைக்கிள் மூலம் பாலத்தீனம் செல்வது எனது நீண்ட நாள் கனவு. சுவிட்சர்லாந்து மற்றும் ஆல்ப்ஸ் மலைகளுக்கும் சைக்கிளில் செல்ல வேண்டும். காஸாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு நிதி திரட்ட இதைச் செய்யலாம் என முடிவெடுத்தேன். அங்கு மருத்துவ அமைப்பு அழிந்து வருகிறது.” என்று கூறுகிறார் அபேத்.

அபேத் இதுவரை பத்து நாடுகளின் வழியாக சைக்கிள் பயணம் செய்து துருக்கியை அடைந்துள்ளார்.

“காஸா படுகொலைகளை என்னால் தடுத்து நிறுத்த முடியும் எனச் சொல்லவில்லை. ஆனால், அதற்காக ஒன்றும் செய்யாமல் வீட்டில் இருக்க முடியாது அல்லவா. என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்கிறேன்.” என்று கூறுகிறார் அபேத்.

அபேத் இதுவரை 2,600 கி.மீ. சைக்கிளில் பயணம் செய்துள்ளார். இன்னும் சில வாரங்களில் பாலத்தீனத்தை அடைந்து விடலாம் என அவர் நம்புகிறார்.

முழு விவரம் காணொளியில்.

ஜெர்மனி முதல் காஸா வரை சைக்கிள் பயணம் செய்யும் இளைஞர்
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய  இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)