குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து வருவது உலகை எவ்வாறு பாதிக்கும்?

காணொளிக் குறிப்பு, 2080ல், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18 வயதிற்கு உட்பட்டவர்களை விட அதிகமாக இருப்பார்கள்.
குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து வருவது உலகை எவ்வாறு பாதிக்கும்?

இந்த நூற்றாண்டின் இறுதியில் உலக மக்கள் தொகை குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக, சீனாவின் தற்போதைய 140 கோடி மக்கள் தொகை கிட்டத்தட்ட பாதியாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர்க்க, பல நாடுகளில் ஒரு பெண்ணுக்கு 2.1 என்ற விகிதத்தில் குழந்தைகள் பிறப்பு விகிதம் இருக்க வேண்டும்.

ஆனால் இந்த நூற்றாண்டின் இறுதியில், ஆப்பிரிக்காவில் உள்ள சில நாடுகளைத் தவிர, பெரும்பாலான நாடுகளில் இந்த பிறப்பு விகிதம் குறைவாகவே இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

பிறப்பு விகிதங்கள் குறைவதற்கு, எளிய கருத்தடை முறைகள், பெண்களுக்கு அதிக அளவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கிடைப்பது, வாழ்க்கை செலவினம் அதிகரிப்பு ஆகியவை சில காரணங்களாக கூறப்படுகிறது.

குறைவான மக்கள் தொகை இருந்தால் பொதுச் சேவைகள், உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் மீதான அழுத்தத்தை குறைக்கலாம், ஆனால் இது முதியோர் எண்ணிக்கை அதிகரிக்க வழிவகுக்கிறது.

2080ஆம் ஆண்டில், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18 வயதிற்கு உட்பட்டவர்களை விட அதிகமாக இருப்பார்கள்.

அதாவது மருத்துவ மற்றும் ஓய்வூதியச் செலவுகள் உயரக்கூடும். குறைவான ஆட்களே வேலையில் இருப்பார்கள் என்பதால், பணம் குறைவாகவே இருக்கும்.

நம் வாழ்நாளில் அதிகமான நேரத்தை வேலையில் செலவிட வேண்டி வருவதை இது குறிக்கிறது.

மக்கள்தொகை மாற்றங்களை சமன் செய்ய நாடுவிட்டு நாடு இடம்பெயர்வது உதவலாம். ஆனால் குறைவான பிறப்பு விகிதங்கள் எல்லாவற்றையும் மாற்றி, ஒரு புதிய உலகத்தை உருவாக்கும். அதற்கு நாம் தயாராக வேண்டும்.

குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து வருவது உலகை எவ்வாறு பாதிக்கும்?

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)