இந்தியா - இரான் இடையிலான புதிய ஒப்பந்தம்: பாகிஸ்தான், சீனாவுக்கு என்ன சவால்?

காணொளிக் குறிப்பு, இந்தியா - இரான் இடையிலான புதிய ஒப்பந்தம்: பாகிஸ்தான், சீனாவுக்கு என்ன சவால்?
இந்தியா - இரான் இடையிலான புதிய ஒப்பந்தம்: பாகிஸ்தான், சீனாவுக்கு என்ன சவால்?

இந்தியா மற்றும் இரானுக்கு இடையே திங்கள்கிழமை ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இது பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு ஒரு பெரிய அடியாக கருதப்படுகிறது. இந்த ஒப்பந்தம் இப்போது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஒரு விவாதத்தை உருவாக்கியிருக்கிறது.

இரானுடன் ஒப்பந்தம் செய்ததால் இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படவும் சாத்தியங்கள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்திருக்கும் நிலையில், யாரும் இந்த ஒப்பந்தம் குறித்து 'குறுகிய கண்ணோட்டத்துடன்' பார்க்கக் கூடாது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இரானின் சாபஹார் நகரத்தில் அமைந்துள்ள ஷாஹித் பெஹெஸ்தி துறைமுகத்தை இயக்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியாவும் இரானும் கையெழுத்திட்டுள்ளன. ஷாஹித் பெஹெஸ்தி இரானின் இரண்டாவது மிக முக்கியமான துறைமுகமாகும்.

இந்தியா - இரான் இடையிலான புதிய ஒப்பந்தம்: பாகிஸ்தான், சீனாவுக்கு என்ன சவால்?

பட மூலாதாரம், Getty Images

இந்தியா போர்ட்ஸ் குளோபல் லிமிடெட் மற்றும் இரானின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்பு ஆகியவற்றுக்கு இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தியாவின் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த் சோனோவால் இரானுக்குச் சென்று இரானிய அமைச்சருடன் இந்த முக்கியமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இரான் எல்லைக்கு அருகில் உள்ள குவாதர் துறைமுகத்தை பாகிஸ்தானும் சீனாவும் மேம்படுத்தி வருகின்றன.

இந்தியா, இரான் மற்றும் ஆப்கானிஸ்தானை இணைக்கும் சாபஹார் துறைமுகம், குவாதர் துறைமுகத்திற்கு சவாலாக பார்க்கப்படுகிறது. இது பத்து ஆண்டுகள் நீடிக்கும் ஒப்பந்தம். அதன் பிறகு அது தானாகவே நீட்டிக்கப்படும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)