மெத்தனால் உடலுக்குள் சென்றதும் விஷமாக மாறுவது எப்படி? - காணொளி

காணொளிக் குறிப்பு, மெத்தனால் உடலுக்குள் சென்றதும் விஷமாக மாறுவது எப்படி?
மெத்தனால் உடலுக்குள் சென்றதும் விஷமாக மாறுவது எப்படி? - காணொளி

கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த சாராயத்தை அருந்தி ஏராளமானோர் உயிரிழந்திருக்கிறார்கள். இத்தகைய சாராயத்தில் ஏன் மெத்தனால் பயன்படுத்தப்படுகிறது? அது எப்படி விஷமாக மாறி உயிரைப் பறிக்கிறது? சாராய தயாரிப்பில் மெத்தனால் ஏன் சேர்க்கப்படுகிறது?

அனைத்து வகையான மதுபானங்களிலும் எத்தனால் எனப்படும் வேதிப்பொருள் உள்ளது. வேதியியல் அடிப்படையில் பார்த்தால், எத்தனால் மனித உடலின் நரம்பு கடத்தலின் அளவைக் குறைக்கிறது.

இதன் காரணமாகப் போதை விளைவுகளுக்கு வழிவகுக்கிறது. எத்தனால் வேதிப்பொருளின் விலை அதிகம். இது மதுபானமாக மாற நேரம் தேவைப்படும். அனைத்து மதுபானத்திலும் குறிப்பிட்ட அளவில்தான் எத்தனால் சேர்க்கப்பட்டிருக்கும். பீரில் 5% மற்றும் பிற மதுபானத்தில் 40% வரை எத்தனால் அளவு இருக்கும்.

இது உடனே உயிரைப் பாதிக்கக் கூடிய வேதிப்பொருள் அல்ல. ஆனால், காலப்போக்கில் மது அருந்தும்போது உடல் உறுப்புகளைப் பாதிக்கும் தன்மை கொண்டது.

ஆனால், கள்ளக்குறிச்சியில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட சாராயம், மெத்தனால் எனப்படும் எரிசாராயம் கலந்து தயாரிக்கப்பட்டது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

முழு விவரம் காணொளியில்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய  இங்கே கிளிக் செய்யவும்.

பட மூலாதாரம், Getty Images

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மெத்தனால்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மனித உடலில் குறைந்தபட்சம் 30 மில்லி மெத்தனால் சென்றாலே அது உயிரைப் பாதிக்கும் விஷமாக மாறும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)